Sunday, September 23, 2007

359. 'அகிம்சை' குறித்து கி.அ.அ.அனானி !

திடீரென்று நண்பர் கி.அ.அ.அனானி, அகிம்சை பற்றி ஒரு மேட்டர் எழுதி மெயிலில் அனுப்பியிருந்தார் (அவர் காந்தியின் ரசிகர் என்ற விஷயம் இப்போது தான் தெரிய வந்தது ;-)) கி.அ.அ.அ எழுதி நான் பதிப்பித்ததில், என் மனதைத் தொட்ட மேட்டர் இது தான் ! மேட்டர் பதிவாக கீழே.

எ.அ.பாலா
***************************
எனக்கு அப்போது 16 வயது. எனது பெற்றோருடன் தென் ஆப்ரிக்கா, டர்பன் நகருக்கு வெளியே 18 மைல் தொலைவில் கரும்புத் தோட்டங்களுக்கு நடுவில் வசித்து வந்தோம்.நாங்கள் இருந்த இடம் நகருக்கு வெகுதொலைவிலும் அக்கம் பக்கம் யாரும் இல்லாமல் தனித்தும் இருந்ததால், நானும் என் இரு சகோதரிகளும் , எப்போதாவது கிடைக்கும் நகரத்திற்கு போகும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருப்போம். நகரப் பரபரப்பில் நண்பர்களுடன் மற்றும் திரையரங்குகளில் மகிழ்ச்சியாக சில மணிகளைக் கழிக்கலாம் என்று.

ஒரு நாள் என் தந்தையார் ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ள நகரத்திற்கு கிளம்பிய போது அவருக்கு கார் ஓட்டியாக வரும்படி என்னைப் பணித்தார்.அது நாள் முழுவதும் நடக்கக் கூடிய கருத்தரங்கம்.நான் அளவு கடந்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தேன்.ஒரு நாள் முழுவதும் டவுனில்..நண்பர்களுடன் ...என மகிழ்சிக்கு அளவே இல்லை. என் தாயார் நகரிலிருந்து வாங்கி வர வேண்டிய மளிகைச் சாமான்களின் பட்டியலை கொடுத்தார்.தந்தையார் காரை சர்வீஸுக்கு விடுவது உட்பட மேலும் முடிக்க வேண்டிய சில சிறு சிறு அலுவல்களையும் சொன்னார்.

தந்தையாரை கருத்தரங்கில் விட்ட போது " மாலை இதே இடத்தில் 5.00 மணிக்கு சந்திக்கலாம்.வீட்டிற்கு சேர்ந்தே திரும்பச் செல்லலாம் " எனக் கூறினார்

எனக்கு பெற்றோர் தந்த வேலைகளை அவசரமாக முடித்துக் கொண்டு, நேராக பக்கத்திலிருந்த சினிமா தியேட்டருக்குள் நுழைந்தேன். படம் பார்க்கும் சுவாரஸ்யத்தில் நேரம் போனதே தெரியவில்லை.கடிகாரத்தைப் பார்த்தால் மணி 5.30. அவசர அவசராம காராஜுக்கு சென்று காரை பெற்றுக் கொண்டு ,தந்தையார் குறிப்பிட்டிருந்த இடத்தை அடைந்த போது மணி 6.00

தந்தையார் சற்றே கவலை தோய்ந்த முகத்துடன் " ஏன் லேட்" என்று கேட்டார். சினிமா பார்த்துக் கொண்டு உட்கார்ந்ததில் நேரம் போனது தெரியவில்லை என சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு" கார் சர்வீஸ் செய்ய நேரமாகி விட்டது" என பொய் சொன்னேன்.அதைச் சொன்ன மறுகணமே எனது மடத்தனத்தை உணர்ந்தேன். தந்தையார் ஏற்கனவே காராஜில் போன் செய்து கேட்டிருப்பார் . என் பொய் ஒரே நிமிடத்தில் சாயம் வெளுத்தது.நான் அச்சத்துடன் தந்தையாரை ஏறிட்டேன்.அவர் என்னைப் பார்த்து பின்வருமாரு சொன்னார் " நான் உன்னை வளர்த்த விதத்தில் ஏதோ குறை இருக்கிறது.அதுதான் என்னிடம் உண்மையை தைரியமாகச் சொல்லும் தன்னம்பிக்கையை உனக்கு தரவில்லை.நான் உன்னை வளர்ப்பதில் எங்கு தவறிழைத்தேன் என்பதைப் பற்றி சிந்தித்து என்னை திருத்திக் கொள்வதற்காக...நான் வீடுவரை உள்ள 18 மைல்களும் இதைப் பற்றி யோசித்தவாரே நடக்கப் போகிறேன்"

இவ்வாறாக கூறியதுடன் நில்லாது , கோட்டு சூட்டுடன், கரடு முரடான கிராமத்து இருட்டு சாலையில் நடக்க ஆரம்பித்தார்.என்னால் அவரை விட்டு சொல்லவும் முடியவில்லை.எனவே அடுத்த ஐந்தரை மணி நேரம், நான் சொன்ன ஒரு சிறு முட்டாள்தனமான பொய்யால் தந்தையார் படும் மன வேதனையும், கரடு முரடான நீண்ட சாலையில் நடந்து என்னால் அவர் படும் உடல் வேதனையும் பார்த்துப் பார்த்து நொந்து கொண்டே அவரது பின்னாலேயே காரை மெதுவாக செலுத்திக் கொண்டே சென்றேன்.அந்தக் கணத்தில் நான் முடிவெடுத்தேன் " வாழ்க்கையில் நான் எப்போதும் பொய் சொல்லக் கூடாதென்று"

பின்னாளில் நான் இதைப் பற்றி பலமுறை சிந்திதது ஆச்சரியப் பட்டதுண்டு.அன்று எனது தந்தையார் என்னை சாதரணமாக கடிந்து கொண்டோ,திட்டியோ ,ஏன் அடித்தோ போன்ற நாம் நமது குழந்தைகளிடம் பின்பற்றும் ஏதாவது ஒரு முறையில் தண்டித்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று. நான் வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாமல் கற்ற அந்தப் பாடத்தை கற்றிருப்பேனா? கண்டிப்பாக மாட்டேன். நானும் அவர் தந்த தண்டனையை ஏற்று, மறந்து, மறுபடியும் அதே தவறை மீண்டும் செய்திருப்பேன். ஆனால் அஹிம்சை வழியில் என் தந்தை செய்த செயலானது, இன்னும் இச்சம்பவம் நேற்றுதான் நடந்தது போல் என் நினைவில் பசுமையாய்ப் பதிந்து ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. இதுதான் அஹிம்சையின் சக்தி"
*******************************************************************************
"மஹாத்மா காந்தியின் பேரனும்,காந்தி அஹிம்சா பல்கலைக் கழக நிருவனருமான டாக்டர்.அருண் காந்தி , போர்டோ ரிகோ பல்கலைக் கழகத்தில் ஆற்றிய உரையின் போது , அஹிம்சை வழியில் பிள்ளை வளர்ப்பு பற்றி உதாரணமாக குறிப்பிட்ட ஒரு வாழ்க்கை சம்பவம் இது."

கி அ அ அனானியின் குறிப்பு கீழே

இப்படிப்பட்ட "அஹிம்சை" என்ற சக்தி மிகுந்த ஆயுதத்தை ஒரு தேசத்தினையே விடுதலை அடையச் செய்ய உபயோகிக்க முடியும் என்று சொல்லி அவ்வழியில் நின்றதோடல்லாமல், மக்களை வழி நடத்தி , சுதந்திரக் காற்றை சுவாசிக்க வைத்து நிரூபித்த அந்த மஹான், அண்ணல் , மஹாத்மா காந்தியடிகள் பற்றி அங்கங்கு கேட்டது படித்தது வைத்தெல்லாம் கண்ட படி ஏதோ வாய்க்கு வந்தபடி பேசுவது அல்லது எழுதுவதெல்லாம் குருடர்கள் யானையைத் தடவிப் பார்த்துச் சொன்னது போலத்தான்.

முடிக்கும் முன்

2000 -ஆம் ஆண்டு பி பி சி செய்திகள் வலைத்தளத்தினால் நடத்தப் பட்ட வாசகர்கள் மில்லினியம் வாக்கெடுப்பில் " கடந்த 1000 வருடங்களில் தோன்றிய மனிதர்களிலேயே உன்னதமானவர் என்று தேர்ந்தெடுக்கப் பட்டவர் " மோஹன் தாஸ் கரம்சந்த் காந்தி "

அந்த மஹான் தோன்றிய மண்னில் நாமும் தோன்றியதை எண்ணி பெருமை கொள்வோம்..அவர் பற்றி மென்மேலும் படித்துணர்வோம்.

வாழ்க மஹாத்மா காந்தி...வளர்க அவர்தம் ஒப்பிலா அஹிம்சை தத்துவங்கள்...ஜெய் ஹிந்த்

கி அ அ அனானி

*** 359 ***
6 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test comment !

dondu(#11168674346665545885) said...

அகிம்சையின் சக்தியே தனிதான். இப்போது போடு போடென்று போட்டு கொண்டிருக்கும் ஹாரி பாட்டர் கதைகளில் முதலில் வெளியில் வருவது, வில்லனை எதிர்த்து தன் மந்திரக்கோலை இயக்க நிலையில் இல்லாதிருந்த ஹாரியின் அன்னை தன் மகனுக்காக தன் உயிரை தியாகமே. அதுதான் ஹாரிக்கு கதை முழுதும் பாதுகாப்பு கொடுத்தது.

அதே மாதிரி தியாகத்தை ஹாரியும் கடைசி புத்தகத்தில் செய்தது ஒரு கவிதையே.

இதனால் நான் சொல்ல வருவது இதுதான். அஹிம்சை என்பது மிக பயங்கரமான ஆயுதம். காந்தி படத்தில் தொண்டர்கள் வரிசையாக அடிப்பட்டு விழ, அடுத்த வரிசை முன்னேறி அடிபடுவது பார்க்க மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி. அக்காட்சியை டெலிஃபோன் மூலம் தனது பேப்பருக்கு டிக்டேட் செய்யும் அமெரிக்க பத்திரிகையாளர் உணர்ச்சிவசப்பட்டது வெள்ளிடை மலை.

இந்த மகத்தான தத்துவத்தை கிண்டல் செய்பவரை புறக்கணிப்பதே நலம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Hariharan # 03985177737685368452 said...

நல்ல பதிவு.

இப்படி பொய் புளுகின சப்பை மேட்டருக்குப்போய் 18 மைல்தூரம் நடந்து தன்னை வருத்திக்கொண்ட கோட், சூட் தந்தைக்கும் மசோகிஸ்டு பட்டம் தரப்படுமா?


புகைத்து நுரையீரலையும், குடித்து ஈரலைக் கெடுத்துக் கொள்ளும் குடிகார மசோகிஸ்டு "மஸ்கிடோ மணிகள்" காந்தியை மசோகிஸ்டு என்பது ஹிம்சை!

காந்தியின் அஹிம்சை முன்வைத்த சுதந்திரப்போராட்டம் குறித்து அடியேனும் கேட்டது, படித்தவையிலிருந்து தொகுத்து ஒரு பதிவிட எண்ணியிருக்கிறேன்.

காந்தியை Macho-manஆகத் தெரியாது.
ஆனால் கண்டிப்பாக காந்தி ஒரு Macro-Man. என உணர்கிறேன்.

குறிப்பு:
எ.அ.பாலா ,
வேர்ட் வெரிபிகேசன் எனேபிள் செய்யப்பட்ட இந்தப் பதிவுல பின்னூட்டம் போடுவது ஜெனிவாவில் எனக்கு இல்லாத ஸ்விஸ் பேங்க் அக்கவுண்ட்டை டீல் பண்ற ஒரு ஜென்யூன் ஃபீலிங் கிடைக்குது :-))

ச.சங்கர் said...

பாலா

உன்னைப் பற்ரி ஒரு பதிவு போட்டிருக்கிறேன்

http://ssankar.blogspot.com/2007/09/cnn-ibn-tv.html

வாழ்த்துக்கள்

பின்குறிப்பு : இந்தப் பதிவில் சொல்லப் பட்ட சம்பவம் நல்லா இருக்கு

அன்புடன்...ச.சங்கர்

enRenRum-anbudan.BALA said...

Dondu Sir, Hari,
Thanks for your comments!

Sankar,
Special thanks :)

said...

காந்திஜியின் பேரன் பற்றி இந்தத் தகவல் புதுசு.உண்மையிலேயே காந்தி ஒர் உயர்ந்த மனிதர்தான்.அகிம்சை கொள்கை மூலம் ஒரு சமுதாயத்தின் மீதே தாக்கம் ஏற்படுத்தியவராயிற்றே :)

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails